சுடச்சுட

    

    ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி: வைகோ அறிவிப்பு

    By DIN  |   Published on : 17th March 2019 02:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mdmk

    மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் அ.கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று, அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
     மக்களவைக்கான 17-ஆவது பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளராக அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார் என அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
     வேட்பாளர் விவரம்: அ.கணேசமூர்த்தியின் சொந்த ஊர் ஈரோடு சென்னிமலை அருகே உள்ள குமாரவலசு. பிறந்த தேதி 1947 ஜூன்10. சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்துள்ளார்.
     1984-இல் திமுக மாவட்டச் செயலாளராக இருந்தார். திமுகவிலிருந்து பிரிந்து வைகோ மதிமுகவைத் தொடங்கியபோது அவரோடு சென்றார். மதிமுகவில் மாவட்டச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்து, தற்போது அக்கட்சியின் பொருளாளராக இருந்து வருகிறார். 1989-இல் மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினராகவும், 1998-இல் பழனி மக்களவை உறுப்பினராகவும், 2009-இல் ஈரோடு மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
     2014-இல் ஈரோடு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அவரது மனைவி பாலாமணி காலமாகிவிட்டார். தமிழ்பிரியா என்ற மகளும், கபிலன் என்ற மகனும் உள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai