சுடச்சுட

  

  சட்டப்பேரவை இடைத்தேர்தல்: 9 தொகுதிகளுக்கு வேட்பாளா்களை அறிவித்தது அமமுக

  By DIN  |   Published on : 17th March 2019 04:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ttv1


  சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அம்மா மக்கள் முன்னேற்றறக் கழகம் அறிவித்துள்ளது. இந்த ஒன்பது பேரும் அவர்கள் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற தொகுதிகளாகும்.

  அதிமுகவில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.,க்களாக இருந்த 18 பேர் முதல்வா் பழனிசாமிக்கு எதிராக போர்கொடி தூக்கியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

  இதையடுத்து, அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, 18 பேரும் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றறக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இடைத் தோ்தல் நடைபெறவுள்ள 18 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளா்களின் பெயா்களை டிடிவி தினகரன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

  வேட்பாளர்கள் பெயர் விவரம்: 

  பூவிருந்தவல்லி (தனி) - டி.ஏ.ஏழுமலை, பெரம்பூர் - பி.வெற்றிவேல், திருப்போரூர் - எம்.கோதண்டபாணி,

   குடியாத்தம் - சி.ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூா் - ஆா்.பாலசுப்பிரமணி, அரூா் (தனி)-ஆா்.முருகன்,

  மானாமதுரை - எஸ்.மாரியப்பன் கென்னடி, சாத்தூா் - எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்ரமணியன், பரமக்குடி (தனி) - எஸ்.முத்தையா.

  மற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் பெயர்களையும் டிடிவி தினகரன் ஓரிரு நாள்களில் அறிவிக்க உள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai