சுடச்சுட

  
  eps-vasan

   

  17-ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) வெளியிடப்பட்டது.

  அதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:

  கூட்டணி நலனுக்காக எண்ணிக்கையை பார்க்காமல் தொகுதியை ஏற்றோம். சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை என்றால் தனி சின்னத்தில் போட்டியிட்டாலும் கூட வெற்றி பெறுவோம். தஞ்சை தொகுதிக்கான தமாகா வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai