சுடச்சுட

  

  தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

  By DIN  |   Published on : 17th March 2019 02:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  piyush-goyal1

  தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என, மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
   புது தில்லியிலிருந்து சனிக்கிழமை தனி விமானம் மூலம் மதுரை வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
   மக்களவைத் தேர்தலில் நாங்கள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ளவர்களோடு இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் 300 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
   பாஜக.வின் நோக்கம் ஊழலற்ற, பொருளாதார வளர்ச்சி மட்டுமே. அதனால்தான், மாநில அரசுகளின் துணையோடு ஜிஎஸ்டி முறையை அமல்படுத்தினோம். இதை, காங்கிரஸ் கட்சியால் அமல்படுத்த முடியவில்லை. இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மாறுபட்ட கருத்துகளை கூறி வருகிறார். ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஜிஎஸ்டி தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை பாராட்டியுள்ளார்.
   தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai