சுடச்சுட

  

  தமிழக கேரள எல்லையில் இரட்டை வாக்காளர்கள் 1,200 பேர் நீக்கம்: ஆட்சியர் தகவல்

  By DIN  |   Published on : 17th March 2019 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  teni

  தமிழக, கேரள எல்லையில் இரட்டை வாக்காளர்கள் 1,200 பேர் நீக்கப்பட்டிருப்பதாக தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
   தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி கூட்ட அரங்கில் கண்ணகி கோயில் விழா, மக்களவை, சட்டப்பேரவை இடைத் தேர்தல்களை முன்னிட்டு, இரு மாநில அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார். இடுக்கி மாவட்ட ஆட்சியர் எச்.தினேசன் முன்னிலை வகித்தார்.
   இக் கூட்டத்தில், மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு மாவட்ட எல்லைகளில் பல்வேறு கண்காணிப்புக் குழுக்கள் அமைத்தும், இரண்டு மாநில, அலுவலர்கள் ஒருங்கிணைந்து, தேர்தல் விதிமீறல்கள், பணப் பரிமாற்றம் போன்றவற்றை தடுக்கவும், முடிவு செய்யப்பட்டது.
   இரட்டை வாக்காளர்கள்:
   கேரளம் மற்றும் தமிழகத்தில் இரட்டை வாக்குரிமை உள்ள 1,200 பேர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, மேலும், 98 வாக்காளர்கள் கண்டறியப்பட்டு, இதில் 58 வாக்காளர்கள் தமிழகத்தில் நீக்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள 40 வாக்காளர்களை நீக்க இடுக்கி மாவட்ட தேர்தல் அலுவலரிடம், பரிந்துரைக்கப்பட்டதாக ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
   கண்ணகி கோயில் விழா:
   கண்ணகி கோயில் விழா வரும் ஏப்ரல் 19-இல் நடைபெறுகிறது. விழாவில், வழிபாடு, அடிப்படை பணிகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: கண்ணகி கோயிலின் விழா கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும்.
   கண்ணகி கோயிலில் வழிபாடு செய்து திரும்பும் வாகனங்கள் ஒரு முறை அனுமதிச்சீட்டு பெற்றால் போதுமானது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் தமிழக பக்தர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
   கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் எஸ்.கெüதம், மேகமலை வன உயிரினக்காப்பாளர் சச்சின் போஷ்லே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, தேக்கடி புலிகள் சரணாலய துணை இயக்குநர் ஷில்பா குமார், சார் ஆட்சியர் ரா.வைத்தியநாதன், பல்வேறு அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai