சுடச்சுட

  

  தூத்துக்குடியில், வண்ண மீன் விற்பனைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பவளப்பாறைகளை வனத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
   தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் வண்ண மீன்கள் விற்கும் கடையில் பவளப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வன அலுவலர் ரகுவரன் தலைமையிலான வனத் துறையினர் அங்கு சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
   அப்போது, மீன் தொட்டிகளில் வைத்து வெளியூர்களுக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பவளப்பாறைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
   அவற்றில் சில பவளப்பாறைகள் தண்ணீரில் வைத்து பாதுகாக்கப்பட்டிருந்ததால் அவற்றை வனத் துறையினர் மீண்டும் கடலுக்குள் இட்டனர்.
   சம்பவம் தொடர்பாக அண்ணா நகரைச் சேர்ந்த இளஞ்செழியன் (50), கற்குவேல் (32), சுப்பிரமணியன் (42) ஆகிய மூவரிடம் வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai