சுடச்சுட

  

  பெரம்பலூர் தொகுதியில் போட்டி: ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் முடிவு

  By DIN  |   Published on : 17th March 2019 02:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin,_parivendhar

   

  மக்களவைக்கான 17-ஆவது பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அக்கட்சிக்கு பெரம்பலூர் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுவார் என ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் திமுக-வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

  இதையடுத்து ஜஜேகே நிறுவனர் பாரிவேந்தர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai