சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல்: இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  By DIN  |   Published on : 17th March 2019 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத்தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து,அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
   அதிமுக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், எதிர்வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
   அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளிலும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பிரசார பணிகளை ஒருங்கிணைப்பது, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது உள்பட பல்வேறு முக்கிய ஆலோசனைகளும், அறிவுரைகளும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்படுமென அதிமுக வட்டாத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai