சுடச்சுட

    

    மதிமுக போட்டியிடும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும்: வைகோ

    By DIN  |   Published on : 17th March 2019 11:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaiko

     

    மக்களவைக்கான 17-ஆவது பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அக்கட்சிக்கு ஈரோடு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளராக அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சனிக்கிழமை அறிவித்தார்.

    இந்நிலையில், போட்டியிடும் சின்னம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

    எந்த சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்பது குறித்து விரைவில் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai