சுடச்சுட

    

    வாரந்தோறும் 2 நாள்கள் விடுமுறை: வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மறுப்பு

    By DIN  |   Published on : 17th March 2019 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்கிகளுக்கு வாரந்தோறும் இரண்டு நாள்கள் விடுமுறை என்று சமூக வலைதளங்களில் பரவியுள்ள தகவல் உண்மையில்லை என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ மறுப்புத் தெரிவித்தார்.
     வங்கிகளுக்கு முன்பு வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழுநாளும், சனிக்கிழமை அரைநாளும் விடுமுறை விடப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய, மாநில அரசு ஊழியர்களைப் போல, தங்களுக்கும், வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டுமென அரசுக்கு வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், மாதந்தோறும் இரண்டாவது மற்றும் 4-ஆவது சனிக்கிழமை, வங்கிகளுக்கு முழு நாள் விடுமுறையும், முதல் மற்றும் 3-ஆம் சனிக்கிழமை, வங்கிகள் முழு நேரம் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வங்கிகள் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வங்கிகளுக்கு இனி வாரம் தோறும் 2 நாள்கள் விடுமுறை என்றும், அது தொடர்பாக, மும்பையில், இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் நடந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதாகவும், சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. ஆனால், இந்தத் தகவல் உண்மையில்லை என்று வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
     இது குறித்து ,அகில இந்திய வங்கி அதிகாரி கூட்டமைப்பு முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ கூறியது. வங்கிகளுக்கு வாரந்தோறும் 2 நாள்கள் விடுமுறை என்று சமூக வலைதளங்களில் பரவியுள்ள தகவல் உண்மையில்லை. இந்த தகவல் முற்றிலும் தவறானது. ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வாரத்தில், சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தேவை என்ற கோரிக்கை, நெடுங்காலமாக இருந்து வருகிறது. எனினும், அதுதொடர்பாக எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. விடுமுறை குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என்றார் அவர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai