சுடச்சுட

  
  VP

  வால்பாறைக்கு மணல் ஏற்றி வந்த லாரி மலைப் பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் கவிழந்து சனிக்கிழமை விபத்தில் சிக்கியது.
   கோவை மாவட்டம், வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் சாலையைப் புதுப்பிக்கும் பணி மற்றும் சாலையோரம் தடுப்புச் சுவர்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக லாரிகள் மூலம் மணல் கொண்டு வரப்படுகிறது.
   இந்நிலையில், சனிக்கிழமை காலை மணல் ஏற்றி வந்து கொண்டிருந்த ஒரு லாரி, கவர்க்கல் எஸ்டேட் சாலையோரம் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் கணேசன் (26) காயத்துடன் உயிர் தப்பினார். இச் சம்பவம் தொடர்பாக, வாட்டர்பால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai