சுடச்சுட

  

  7 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டு தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை

  By DIN  |   Published on : 17th March 2019 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  TUT

  தூத்துக்குடி வஉசி துறைமுகம் நிகழாண்டில் 7 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
   இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி. ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   தென்னிந்தியாவின் பொருளாதார இயந்திரமாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், கடந்த நிதியாண்டு கையாண்ட அளவான 6.97 லட்சம் சரக்குப் பெட்டகங்களை விட அதிகளவில் நிகழ் நிதியாண்டில் கடந்த 13-ஆம் தேதி வரை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
   இந்தச் சாதனையானது நிகழ் நிதியாண்டில் 18 நாள்களுக்கு முன்பாகவே நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டு கையாண்ட சரக்குப் பெட்டகங்களை ஒப்பிடுகையில் மார்ச் 15-ஆம் தேதி வரை வஉசி துறைமுகம் 7.03 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டு 6.44 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அத்துடன் இந்திய பெருந்துறைமுகங்களில் சரக்குப் பெட்டகம் கையாளுவதில் வஉசி துறைமுகம் 3-ஆவது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai