மக்களவைத் தேர்தல் 3 மாநில விசிக வேட்பாளர்கள்: திருமாவளவன் அறிவிப்பு

தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. 
மக்களவைத் தேர்தல் 3 மாநில விசிக வேட்பாளர்கள்: திருமாவளவன் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 இடங்களில் போட்டியிடுகிறது. இந்நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். 

தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. அவற்றில் ஆந்திரா மற்றும் கேரளாவில் தனிச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளது. 

தமிழகத்தில் திமுக கூட்டணியில் சிதம்பரம்-திருமாவளவன் (தனிச்சின்னம்) மற்றும் விழுப்புரம்- விசிக பொதுச்செயலாளர் ரவிகுமார் (உதயசூரியன்) சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். 

ஆந்திராவில் 6 தொகுதிகளில் போட்டி. குண்டூர்-ஆந்திர விசிக தலைவர் ஜேகப் வித்யாசாகர், சித்தூர்-சிவபிரசாத், விசாகப்பட்டினம்-ஜார்ஜ் வங்காரி, திருப்பதி-முருகேசன், ராஜம்பேட்-சந்திரசேகர், கடப்பா-ரமாஜி இமானுவேல் போட்டியிடுகின்றனர்.

கேரளாாவில் 3 தொகுதிகளில் போட்டி. இடுக்கி-மா.செல்வராஜ், கோட்டையம்-ஜீவன் கே.விஜயன், கொல்லம்-கே.ஆர்.மீனா போட்டியிடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com