திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு கோடி வேலை வாய்ப்பு? புருவங்களை உயர்த்த வைக்கும் புள்ளி விவரம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 10வது படித்த ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

ஏன்? ஒரு கோடி பேருக்கு வேலை கொடுக்க முடியாதா? முடியாததையா முடியும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்? என்று கேட்டால் நிச்சயம் அதற்கு பதில் எங்களிடம் இல்லை.

நீங்களே வாருங்கள் புள்ளி விவரம் சொல்வதைக் கேளுங்கள்.

தமிழகத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1 கோடி சாலைப் பணியாளர்களை பணியமர்த்த முடியாமல் போனால் கூடப்பரவாயில்லை. இந்தியா முழுவதுமே தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்சம் 5 லட்சம் பேர் மட்டுமே பணியமர்த்த முடியுமாம் சொல்கிறது புள்ளி விவரம்.

அதாவது கடந்த நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 1.13 லட்சம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. தற்போது 5.5 முதல் 7 கி.மீ. தூர சாலைக்கு ஒரு சாலைப் பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

அப்படியானால், திமுக சொன்னபடி இந்த 1.31 லட்சம் கி.மீ. தூரத்துக்குள் ஒரு கோடிப் பேரை நியமிப்பது எப்படி, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 76 பேரை நியமித்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.

ஒரு வேளை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 76 சாலைப் பணியாளர்களை நியமித்து பராமரித்தால் இந்தியா விரைவில் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையான சாலை வசதிகளைக் கொண்டதாக மாறிவிடுமோ.. சற்று பயமாகத்தான் இருக்கிறது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com