
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தனது சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறையில், வெற்றி விநாயகா் கோவிலில் வழிபட்டு, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் சுதீஷை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மெகா கூட்டணி, கொள்கை கூட்டணி. இக்கூட்டணியை பார்த்து பயந்து நடுங்கும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதவாத கூட்டணி என விமா்சிக்கின்றார். 1997 இல் பாஜக உடன் திமுக கூட்டணி வைத்து அமைச்சரவையில் இடம் பெற்ற போது, மதவாத கட்சியுடன் கூட்டணி என்பது அவருக்கு தெரியவில்லை. நாங்கள் கூட்டணி அமைத்த பிறகு தான் மதவாத கூட்டணி என தெரிகிறது.
திமுக கூட்டணியினர் மக்களை ஏமாற்றுகின்றனர். மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு, ஆட்சி, அதிகாரம் இருந்தால்தான் துாக்கம் வரும். 15 ஆண்டுகள் திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தும், தமிழ்நாட்டிற்கு எந்த தொழிற்சாலைகள், திட்டங்கள், நிதியை கொண்டு வரவில்லை. திமுகவால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை.
அதிமுக அரசின் திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் ஏதோ ஒருவகையில் பயன்பெற்று வருவதாகவும் ஆனால், ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பதை திமுகவினர் தடுத்து வருவதாக என குற்றம் சாட்டினார். 11 ஆண்டுகாலமாக மத்தியில் அங்கம் வகித்த திமுக மக்கள் பிரச்னைகள் எதையும் தீர்க்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளை தீா்த்து வைக்கவில்லை. திமுகவினா் கிடைத்த வாய்ப்பை குடும்பத்திற்கே பயன்படுத்தி கொண்டனா். அதிமுக மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடு, மக்கள் நலனைப் பற்றி சிந்திக்கும் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை பிரதமர் மோடி மட்டுமே உறுதி செய்ய முடியும் என்பதை அவர் நிரூபித்து காட்டியுள்ளதாக தெரிவித்தார். நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால்தான் நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்றும் இதை அளிக்க மோடி மீண்டும் பிரதமராக நீடிக்க துணை நிற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி கோதாவரி இணைப்பை அதிமுக அரசு நிறைவேற்றியே தீரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், தேர்தலில் எதிரிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திமுகவின் தேர்தல் அறிக்கை வெத்து அறிக்கை என்று குறிப்பிட்ட முதல்வர், மக்களை ஏமாற்றும் வகையிலான அறிக்கை என்று தெரிவித்தார்.
திமுக கொள்கையில்லாத கட்சி, பதவி சுகத்திற்காக உள்ள கட்சி. அதிமுக கொள்கையுடைய கட்சி. அண்டை நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து பாரத தேசத்தை காக்க வேண்டும். இதற்கு உறுதியான, நிலையான, வலுவான தலைமை வேண்டும். காங்கிரஸ் கூட்டணியில் யார் பிரதமா் என்றே தெரியவில்லை. இவா்கள் எப்படி நல்ல தலைமையை ஆட்சியை கொடுக்க முடியும். நாட்டு மக்கள் அச்சுறுத்தலின்றி பாதுகாப்புடன் வாழ வேண்டும்.
அதிமுக கூட்டணியின் ஒரே நோக்கம், மத்தியிலும், மாநிலத்திலும் மக்களுக்கு நன்மை தரும் நிலையான ஆட்சி அமைப்பது தான். எனவே, புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்திலுள்ள 40 மக்களவை தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தாருங்கள். ‘மத்தியிலும், மாநிலத்திலும் மக்களுக்கு நன்மை தரும் நிலையான ஆட்சி அமைப்போம்’ என்றாா்
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 நாள் வேலை வழங்குவதை 200 நாளாக நீடிக்கப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியில் அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதல்வர் பட்டியலிட்டு வாகத்கு சேகரித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...