கொள்கையால் அமைந்தது திமுக கூட்டணி: மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணி கொள்கை கூட்டணியாகும் என்றார்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 
சேலம் கோட்டை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
சேலம் கோட்டை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


திமுக கூட்டணி கொள்கை கூட்டணியாகும் என்றார்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 
சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து, சேலம் கோட்டை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:  திருவாரூரில் பிரசாரத்தைத் தொடங்கி மூன்றாவது நாளாக, சேலம் கோட்டை மைதானத்தில் பிரசாரம் செய்ய வந்துள்ளேன். மக்கள் எழுச்சியைப் பார்க்கும் போது 40 தொகுதிகளிலும் திமுக அணி தான் வெற்றி பெறப் போகிறது.  அதேபோல,  பாஜக மீதும், அதிமுக மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். சென்னை கோட்டையில் திமுக உதயமாகும் என்பதன் அடையாளமாக, சேலம் கோட்டை மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.  திமுகவின் கோட்டை சேலம் என்பதை மாற்றிவிட முடியாது.  சேலத்தை கோட்டையாக்கிக் காட்டியவர் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.  மாநிலம் முழுவதும் இதுபோன்றவர்களை, மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி உருவாக்கினார். 1957 முதல், தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் தோல்வியே இல்லாமல் தொடர்ந்து வெற்றி பெற்றார். அந்தவகையில், உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால்,  அண்ணா, கருணாநிதி ஆகியோர் பெற்ற வெற்றி எனப் பொருளாகும்.   திமுக அடித்தளம் அமைத்தது சேலத்தில் தான்.  
நீதிக்கட்சி 1944 இல் திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் நடந்த இடம் சேலமாகும்.  அண்ணா, மு.கருணாநிதி ஆகியோர் காலத்தில் சாமானிய மக்களுக்கு ஏராளமான திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தனர். திமுக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன் ரூ.7,000 கோடி தள்ளுபடி,  மகளிர் சுய உதவிக் குழு, சேலத்தில் ரூ.1,553 கோடியில் உருக்காலை தொடங்கியது,  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் சிறப்பு பல் நோக்கு மருத்துவமனை,  சேலம் ரயில்வே கோட்டம் தொடங்கியது என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தோம்.ஆனால், அதிமுக ஆட்சியில் கொள்ளை, கொலை, குட்கா ஊழல், தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலி,  பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள்தான் நடந்துள்ளன.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு எஸ்டேட் வழக்கில்,    திமுக ஆட்சிக்கு வந்தவுடன், குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து சிறையில் அடைப்போம். 
இந்த ஆட்சியின் முறைகேடுகள் குறித்து  மக்களிடம் புகார் தெரிவிக்கி
றோம். புகாரைப் பரிசீலித்து நீங்கள் தான்  தேர்தல் மூலம் அவர்களுக்கு தண்டனை தர வேண்டும்.  திமுகவைவிட மிக தரக்குறைவாக அதிமுகவை விமர்சித்து வந்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ்.  ஆனால்,  தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறார். திமுக கூட்டணி கொள்கை கூட்டணியாகும். ஆனால், அதிமுக அமைத்திருப்பது பேரத்தின் அடிப்படையிலான கூட்டணியாகும். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல ஆட்சிக்கு வந்தால், சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம் ரத்து செய்யப்படும். அதேபோல, சேலம் விமான நிலையத்தில் இரவு நேர விமானம் வந்து செல்லும் வகையில் மேம்படுத்தப்படும். ஜிஎஸ்டி வரி முற்றிலும் மாற்றி அமைக்கப்படும் என்றார்.
கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு,  எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன்,  கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பணிக் குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன், மதிமுக நகர மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com