மக்கள் நீதி மய்யம், வளரும் தமிழகம் கட்சி இடையே கூட்டணி ஒப்பந்தம்: 2 தொகுதிகள் ஒதுக்க முடிவு

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வளரும் தமிழகம் கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளது. 
மக்கள் நீதி மய்யம், வளரும் தமிழகம் கட்சி இடையே கூட்டணி ஒப்பந்தம்: 2 தொகுதிகள் ஒதுக்க முடிவு

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. இதையடுத்து அதற்கான வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார்.

இதனிடையே, தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அக்கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் அறிவித்தார். 

மக்களவைத் தேர்தலில் 1 தொகுதியிலும்,  தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் இந்திய குடியரசுக் கட்சி போட்டியிட உள்ளது. இவை இரண்டிலும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட உள்ளோம் என்று செ.கு.தமிழரசன் தெரிவித்தார்.

இந்நிலையில், மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வளரும் தமிழகம் கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வளரும் தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

வளரும் தமிழகம் கட்சி பேட்டரி டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் எனவும் கூட்டணி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com