தமிழகத்தில் நகர்ப் பகுதிகளில் பொதுக்கூட்டம், பேரணி நடத்தத் தடை: டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவு

தமிழகத்தின்  நகர்ப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்தத் தடை விதித்து தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப் பகுதிகளில் பொதுக்கூட்டம், பேரணி நடத்தத் தடை: டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவு

தமிழகத்தின்  நகர்ப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்தத் தடை விதித்து தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ்.எஸ்.நாராயணா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நெரிசல் மிகுந்த ரத வீதிகளில் அண்மைக்காலமாக அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது. இதனால் பக்தர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே, அங்கு பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு, தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி ஆகியோரை வழக்கில் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராகச் சேர்த்தனர். மேலும் தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை நகர்ப் பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது எனவும், பொதுவான மைதானங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம் எனவும் டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.

டிஜிபி உத்தரவு: இந்த உத்தரவையடுத்து, தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் சனிக்கிழமை அனைத்து மாநகரக் காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு  உத்தரவிட்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது: 

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், உயர்நீதிமன்ற உத்தரவின்படியும் அரசியலமைப்புச் சட்டப்படி பொதுமக்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யும் வகையில் தமிழகத்தில் நகர்ப் பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிகள், தெரு முனைகள், முக்கியமான சாலைகள் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள், பேரணி, ஊர்வலம் ஆகியவற்றை நடத்த அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com