மக்களவைத் தேர்தலில் கமல் போட்டியிடவில்லை: மநீம-வின் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் கமல் போட்டியிடவில்லை: மநீம-வின் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு


மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மார்ச் 20-ஆம் தேதி வெளியிட்டது. 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த பொதுக் கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: 

  • கோவை - மகேந்திரன் (துணைத் தலைவர்)
     
  • திருப்பூர் - சந்திரகுமார்
     
  • ஈரோடு - சரவணகுமார்
     
  • நாமக்கல் - தங்கவேலு
     
  • கள்ளக்குறிச்சி - கணேஷ்
     
  • சிவகங்கை - சிநேகன்
     
  • காஞ்சிபுரம் - எம்.தங்கராஜ்
     
  • திருவண்ணாமலை - அருள்
     
  • ஆரணி - வி.ஷாஜி
     
  • தென் சென்னை - ரங்கராஜன்
     
  • மதுரை - அழகர்
     
  • தஞ்சாவூர் - சம்பத் ராமதாஸ்
     
  • கடலூர் - அண்ணாமலை 
     
  • தென்காசி - முனீஸ்வரன்
     
  • பெரம்பலூர் - அருள்பிரகாசம்
     
  • ராமநாதபுரம் - விஜயபாஸ்கர்
     
  • கரூர் - ஹரிஹரன்
     

இந்த மக்களவைத் தேர்தல் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. ஏற்கனவே, வெளியிடப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலில் 21 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தற்போது மீதமுள்ள 17 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக, தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தெரியவரும் என்ற வகையில் பதிலளித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com