5-க்கும் அதிகமான மாவட்டங்களில் கோடிக்கணக்கான ரொக்கம் பறிமுதல்

தமிழகத்தில் 5-க்கும் அதிகமான மாவட்டங்களில் ரூ.3 முதல் ரூ.5 கோடி வரையிலான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் பறக்கும்படையினரால் ரூ.4.59 கோடி ரொக்கப் பணம்
5-க்கும் அதிகமான மாவட்டங்களில் கோடிக்கணக்கான ரொக்கம் பறிமுதல்


தமிழகத்தில் 5-க்கும் அதிகமான மாவட்டங்களில் ரூ.3 முதல் ரூ.5 கோடி வரையிலான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் பறக்கும்படையினரால் ரூ.4.59 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் ஆகியுள்ளது. இதுகுறித்து, தமிழக தேர்தல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:-
தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் கடந்த 11-ஆம் தேதி முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 
வாகனங்களில் கொண்டு செல்லப்படும் ரொக்கம், நகைகள் உள்ளிட்டவற்றுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளுக்காக நிலை கண்காணிப்பு படைகளும், பறக்கும் படைகளும் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரு படைகளும் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
இந்த இரு படைகளும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணத்தையும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்து வருகின்றன. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை வரையில் ரூ.33.46 கோடி பறிமுதல் ஆகியுள்ளது.
எங்கெங்கு அதிகம்: பறக்கும் படையினரால் மதுரையில் ரூ.4.59 கோடியும், சேலத்தில் ரூ.2.16 கோடியும், நீலகிரியில் ரூ.1.21 கோடியும், சென்னையில் ரூ.1.25 கோடியும் ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, ஒரு இடத்தில் நிலையாக நின்று சோதனையில் ஈடுபடும் நிலை கண்காணிப்பு குழுக்களும் அதிகளவு ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளன.
அதன்படி, சென்னையில் ரூ.1.33 கோடியும், காஞ்சிபுரத்தில் ரூ.3.15 கோடியும், திருவள்ளூரில் ரூ.1.04 கோடியும், தஞ்சாவூரில் ரூ.1.78 கோடியும், மதுரையில் ரூ.1.44 கோடியும் பறிமுதல் ஆகியுள்ளன.
24 மணி நேரத்தில்...: பறிமுதல் செய்யப்படும் ரொக்கத்துக்கான உரிய ஆவணங்களை 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் அளித்து விட்டால் அந்தப் பணம் உடனடியாக திரும்ப அளிக்கப்பட்டு விடும். ஆனால், அந்த காலகட்டத்தைக் கடந்தும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால் அது கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு அரசு வசம் சேர்க்கப்படும். எப்போது உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுகிறதோ, அப்போது அந்தப் பணம் விடுவிக்கப்படும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com