கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம்: தமிழக தேர்தல் துறை தகவல்

மக்களவைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம் என்பது குறித்து தேர்தல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 11-இல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 9-இல் ஓய்கிறது. எனவே, அன்றைய தினம் மாலையில் இருந்து ஏழாவது கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள மே 19-ஆம் தேதி வரையிலும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தக் கூடாது. இதேபோன்று, கருத்துக் கணிப்புகளையும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் தமிழகத்துக்கும் பொருந்தும். மே 19-ஆம் தேதிக்குப் பிறகே வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு போன்றவற்றை வெளியிட முடியும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com