சேமநல நிதி செலுத்தாத வழக்குரைஞர்கள் இடைநீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு

சேமநல நிதி தொகையைச் செலுத்தாத 5 ஆயிரத்து 970 வழக்குரைஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சேமநல நிதி செலுத்தாத வழக்குரைஞர்கள் இடைநீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு

சேமநல நிதி தொகையைச் செலுத்தாத 5 ஆயிரத்து 970 வழக்குரைஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சேமநல நிதி என்பது வழக்குரைஞர்கள் நலனுக்கானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ள நீதிமன்றம், வழக்கை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

2 வாரத்துக்கு இடை நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

தமிழகத்தில் 5 ஆயிரத்து 970 வழக்குரைஞர்கள், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு செலுத்த வேண்டிய சேமநல நிதிக்கான தொகையைச் செலுத்தவில்லை. எனவே, அவர்கள் 5,970 பேரையும் வழக்குரைஞர் தொழில் இருந்து இடைநீக்கம் செய்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது.   

மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்குரைஞர்கள், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட எந்த நீதிமன்றத்திலும், தீர்ப்பாயங்களிலும் வழக்குரைஞராக ஆஜராகக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 5,970 வழக்குரைஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் பிறப்பித்துள்ள உத்தரவு தன்னிச்சையானது. இந்த உத்தரவு வழக்குரைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். மேலும் முறையாக நோட்டீஸ் அனுப்பாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே 5,970 வழக்குரைஞர்களை இடைநீக்கம் செய்தது சட்டவிரோதமானது. இந்த உத்தரவை செல்லாது என அறிவிப்பதோடு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அமர்வு, பார் கவுன்சில் உத்தரவை 2 வார காலத்துக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com