பாஜக கூட்டணிக் கட்சி போல தேர்தல் ஆணையம் இயங்குகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாஜகவின் கூட்டணிக் கட்சியாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக கூட்டணிக் கட்சி போல தேர்தல் ஆணையம் இயங்குகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


பாஜகவின் கூட்டணிக் கட்சியாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து  திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், இடைத் தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பாஜக கூட்டணியில் இருக்கும், அதிமுக அரசிடமே முழுமையாக ஒப்படைத்து விட்டு, இந்திய தேர்தல் ஆணையம் ஒதுங்கிக் கொண்டு விட்டதோ என்ற  சந்தேகம், தேர்தலைச் சந்திக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
 பல மாதங்கள் காலியாக உள்ள  இடைத் தேர்தலை நடத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ள தேர்தல் ஆணையம், மக்களவைத் தேர்தலுடன் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவிக்காதது முதல் கோணல் முற்றிலும் கோணல்  போல அமைந்து விட்டது. பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளிலும்  நீதிமன்ற தடையுத்தரவு இல்லாத நிலையிலும், இடைத் தேர்தலை தள்ளி  தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. 
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ சோதனை செய்த டிஜிபியை வைத்தே தேர்தலை நடத்த, அதிமுக அரசுக்கு இங்குள்ள தலைமை தேர்தல் அதிகாரி அனுமதிக்கிறார். தேர்தல் ஆணையமும் எவ்வித சலனமுமின்றி வேடிக்கை பார்க்கிறது. ஆளுங்கட்சியினரின் அத்தனை விதிமுறை மீறல்களையும் தலைமை தேர்தல் அதிகாரி  அனுமதிக்கிறார்.திருப்பரங்குன்றம் தேர்தலில்  ஜெயலலிதாவின் கைரேகை குறித்து உயர் நீதிமன்றம் சந்தேகத்தை எழுப்பியதுடன், தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்த பிறகும்,  தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், வழக்குத்தொடுப்பதற்கும் தேர்தல் ஆணையம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை.  
சின்னங்கள் ஒதுக்குவதில் தமிழகத்தைப் பொருத்தவரை இந்திய தேர்தல் ஆணையம்  பாரபட்சமாகவும், ஒருதலைப்பட்சமாகவும் செயல்படுகிறது. எதிர்க்கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஏற்கெனவே பயன்படுத்திய சின்னங்கள் மறுக்கப்படுகின்றன. ஆனால், பாஜக அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அங்கீகாரத்தை இழந்திருந்தாலும்,  பழைய சின்னமே ஒதுக்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியைப் போல்  தேர்தல் ஆணையம் செயல்படுவது  அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com