மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிவிப்பு: கமல்ஹாசன் போட்டியிடவில்லை

மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் மற்றும் 18 சட்டப்பேரவை
கோவையில்  அறிவிக்கப்பட்ட  மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுடன் கமல்ஹாசன்.
கோவையில்  அறிவிக்கப்பட்ட  மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுடன் கமல்ஹாசன்.


மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலைக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் அறிமுக விழா மற்றும் மாற்றத்தின் தொடக்க விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 19 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப் பேரவை இடைத்தேர்தல்களில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலைக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
இதன்  விவரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் ஆனந்தமலை எம்.தங்கராஜ், திருவண்ணாமலையில் ஆர்.அருள், ஆரணியில் வி.ஷாஜி, கள்ளக்குறிச்சியில் ஹெச்.கணேஷ், நாமக்கல்லில் ஆர்.தங்கராஜ், ஈரோட்டில் ஏ.சரவணகுமார், ராமநாதபுரத்தில் ஜெ.விஜயபாஸ்கர், கரூரில் மருத்துவர் ஹரிஹரன், பெரம்பலூரில் வி.அருள்பிரகாசம், தஞ்சாவூரில் ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ், சிவகங்கையில் கவிஞர் சினேகன், மதுரையில் எம்.அழகர், தென் சென்னையில் ஆர்.ரங்கராஜன், கடலூரில் வி.அண்ணாமலை, விருதுநகரில் வி.முனியசாமி, தென்காசியில் கே.முனீஸ்வரன், திருப்பூரில் வி.எஸ்.சந்திரகுமார், பொள்ளாச்சியில் மூகாம்பிகை ரத்தினம், கோவையில் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். ஏற்கெனவே முதல்கட்டமாக, 21 மக்களவைத்  தொகுதிகளுக்கு வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சட்டப் பேரவைத் தொகுதிகள்: பூந்தமல்லி பேரவைத் தொகுதியில் பூவை ஜெகதீஷ், பெரம்பூர் தொகுதியில் யு.பிரியதர்ஷினி, திருப்போரூர் தொகுதியில் இந்திய குடியரசுக் கட்சியின் கருணாகரன், சோளிங்கரில் இந்திய குடியரசுக் கட்சியின் கே.எஸ்.மலைராஜன், குடியாத்தத்தில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் பி.வெங்கடேசன், ஆம்பூரில் நந்தகோபால், ஓசூரில் பி.ஜெயபால், பாப்பிரெட்டிபட்டியில் நல்லாத்தம், அரூர் தொகுதியில் குப்புசாமி, நிலக்கோட்டையில் சின்னதுரை, திருவாரூரில் கே.அருண் சிதம்பரம், தஞ்சாவூரில் துரை அரசன், மானாமதுரையில் எம்.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டியில் வளரும் தமிழகம் கட்சியின் தங்கவேல், பெரியகுளம் தொகுதியில் பிரபு, சாத்தூரில் தமிழ் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சுந்தரராஜ், பரமக்குடியில் கே.உக்கிரபாண்டியன், விளாத்திகுளம் தொகுதியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நடராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றில் எந்தத் தொகுதியிலும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com