வேட்பாளர் சொத்து மதிப்பு: தமிழிசைக்கு ரூ. 2 கோடி, கனிமொழிக்கு ரூ.30 கோடி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், திமுக வேட்பாளர் கனிமொழி ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 வேட்பாளர் சொத்து மதிப்பு: தமிழிசைக்கு ரூ. 2 கோடி, கனிமொழிக்கு ரூ.30 கோடி


தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், திமுக வேட்பாளர் கனிமொழி ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பாஜக வேட்பாளர் தமிழிசைசெளந்தரராஜன்:
 தனக்கு ரூ. 1 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 600 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 50 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும்  உள்ளதாகவும், தனது கணவர் செளந்தரராஜன் பெயரில் ரூ. 2 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனக்கு வங்கியில் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரம் கடன் இருப்பதாகவும், தன் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திமுக வேட்பாளர் கனிமொழி:
 தனக்கு,  ரூ. 21 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 370 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 8 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரத்து 200 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. வங்கிகளில் ரூ. 1 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 928 கடன் இருப்பதாகவும், தனது தாய் ராஜாத்தி பெயரில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 48 ஆயிரத்து 413 மதிப்பிலான சொத்து இருப்பதாகவும், தன் மீதான 6 குற்றவியல் வழக்குகளில் இரண்டு வழக்குகள் முடிந்துவிட்டதாகவும், 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com