Enable Javscript for better performance
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: கோவையில் பொதுமக்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: கோவையில் பொதுமக்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 27th March 2019 11:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    coimbatore

    குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தும் போலீஸார். 


    கோவை: கோவை மாவட்டம், துடியலூர் அருகே காணாமல் போன 6 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மாயமான சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் உறவினர்களும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூரைச் சேர்ந்த பிரதீப், வனிதா தம்பதியின் 6 வயது மகள் திப்பனூர்அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

    திங்கள்கிழமை மாலை வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த இச்சிறுமி திடீரென்று மாயமானார். இது குறித்த புகாரின்பேரில் துடியலூர் போலீஸார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வனிதாவின் வீட்டின் முன்னுள்ள சந்தில் துணியால் சுற்றப்பட்ட நிலையில், உடலில் காயங்களுடன் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையின் உடலை துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். 

    குழந்தை கொலையான தகவலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் விசாரணை நடத்தினார்.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதுதொடர்பாக விஜயகுமார் உள்பட 10க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai