Enable Javscript for better performance
தூத்துக்குடியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு பரிசீலனை ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு பரிசீலனை ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 27th March 2019 01:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bjp

    தூத்துக்குடியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், தூத்துக்குடியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவரும், வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதை தமிழிசை தெரிவிக்கவில்லை என திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு மீதான பரிசீலனை பகல் 1:30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai