Enable Javscript for better performance
பொள்ளாச்சி கொடூரம்: பாலியல் கும்பலால் சிறுமி கொலையா? சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி கொடூரம்: பாலியல் கும்பலால் சிறுமி கொலையா? சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு

    By DIN  |   Published on : 27th March 2019 10:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    00000murder

     

    பொள்ளாச்சியில் ஆபாச விடியோ எடுத்து பெண்களிடம் அத்துமீறிய கும்பலால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று பரவி வருகிறது.

    பொள்ளாச்சி ஆபாச விடியோ விவகாரம் தொடர்பாக ஆடியோ ஒன்று கட்செவி அஞ்சல் மூலம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த ஆடியோவில் பேசும் இளம்பெண் ஒருவர், திருநாவுக்கரசு மற்றும் அவரது கும்பலால் நான் பாதிக்கப்பட்டதாகவும். என்னை அவர்கள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியபோது, அங்கு சிறுமி ஒருவர் இருந்தார். அவரைத் திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இதனால், அச்சிறுமி இறந்துவிட்டார். அந்த சிறுமியை ஒரு வீட்டின் வெளியே புதைத்துவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இப்பிரச்னை குறித்து தற்போது அனைவரும் பேசத் துவங்கியுள்ளதால் இதை வெளியில் கொண்டு வந்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து சிபிசிஐடி அதிகாரிகளிடம் கேட்டபோது, பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக விசாரணை தொடங்கிய நாளில் இருந்து சமூக வலைதளங்களில் பல்வேறு ஆடியோக்களும், விடியோக்களும் வெளியாகி வருகின்றன.

    இதில் உள்ள உண்மைத் தன்மை குறித்து ஆராய்வது அவசியம். ஆடியோ வெளியிட்டுள்ள பெண் இந்தக் கும்பலால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் புகார் அளித்தால் முறையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம் என்றனர்.

    மேலும், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ததில் சில குளறுபடிகள் இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரிக்கப்படுவர் என்று அதிகாரிகள் கூறினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai