Enable Javscript for better performance
ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும்? ப. சிதம்பரம் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும்? ப. சிதம்பரம் விளக்கம்

    By DIN  |   Published on : 27th March 2019 10:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chidambaram


    சென்னை: ராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விளக்கம் அளித்தார்.

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம் கூறியதாவது, ஏழைக் குடும்பங்களுக்கு 72 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வல்லுநர் குழு ஒன்று உருவாக்கப்படும். 

    இந்த புதிய திட்டம் நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும். முறைகேடுகளைத் தடுக்க ஏழைகள் அடையாளம் காணப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படும். 

    ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தால் இந்தியாவில் சுமார் 5 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்று சிதம்பரம் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai