ரூ.2,300 கோடியில் கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டம்: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதி

கிழக்குக் கடற்கரை ரயில் பாதைத் திட்டப்பணிகள் ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கீட்டில்  விரைவில் தொடங்கப்படும் என  மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உறுதியளித்தார்.
புதுவை பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில்  என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமியை அறிமுகப்படுத்தி வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.
புதுவை பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில்  என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமியை அறிமுகப்படுத்தி வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.


கிழக்குக் கடற்கரை ரயில் பாதைத் திட்டப்பணிகள் ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கீட்டில்  விரைவில் தொடங்கப்படும் என  மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உறுதியளித்தார்.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமியை அறிமுகப்படுத்தி, அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது:
புதுவையில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. ஏழைகளுக்கு இலவச அரிசியைக்கூட தரவில்லை. மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. மூடப்பட்ட ஆலைகளையும் திறக்கவில்லை. வாக்குறுதிப்படி புதுவைக்கென ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவைக்கூட அமைக்கவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டம் புதுவையில் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இப்படிப்பட்ட நல்ல  திட்டங்களை மத்திய அரசு கொடுத்திருந்தாலும், அவற்றை புதுவை அரசு செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது. பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.1850 கோடி, ஜிப்மர் மருத்துவமனை மேம்பாட்டுப் பணி, புதிய கட்டடங்களுக்கு ரூ.400 கோடி, பொலிவுறு கிராமத் திட்டத்தின் கீழ் பாகூர், திருநள்ளாறுக்கு ரூ.200 கோடி, குடிநீர்த் தேவைக்காக ரூ.500 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.மேலும், மீனவர் மேம்பாட்டுக்காகவும், வருவாயைப் பெருக்கவும் பல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதுவை மக்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த, சென்னையிலிருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு 179 கி.மீ தொலைவுக்கு ரூ.2,300 கோடியில் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு முடிவடைந்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார் பியூஸ்கோயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com