Enable Javscript for better performance
எழும்பூர்-கொல்லம் சிறப்பு ரயில் ரத்து- Dinamani

சுடச்சுட

    


    சென்னை எழும்பூர்- கொல்லத்துக்கு வாரத்துக்கு மூன்று நாள்கள் வீதம்  ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட இருந்த  சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு வாரத்துக்கு மூன்று நாள் வீதம் சிறப்பு ரயில் (06031) ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரயிலை இயக்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, இந்த சிறப்பு ரயில் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி  வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயிலும் (06032) ரத்து செய்யப்படுகிறது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai