Enable Javscript for better performance
கருவரை முதல் கல்லறை வரை.. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் வேதனைப் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    கருவரை முதல் கல்லறை வரை.. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் வேதனைப் பேச்சு

    By DIN  |   Published on : 28th March 2019 04:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    HighCourtch


    சென்னை: கருவரை முதல் கல்லறை வரை லஞ்சம் அதிகரித்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின் போது, நீதிபதி சுப்ரமணியம் லஞ்சம் குறித்து தனது வேதனை நிறைந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.

    அதில், ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும். உண்மையிலேயே ஒரு தேசத்தின் விரோதிகள் ஊழல்வாதிகள்தான். ஊழல் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றால், அரசு அலுவலகங்களில் லஞ்சத்துக்கு பதில் இச்சைக்கு இணங்கச் செய்வது போன்ற விஷயங்கள் அதிகரித்து வரும் அளவுக்கு மாறியுள்ளது.

    மக்கள் பிரதிநிதிகளே ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்தின் அடிமட்டத்தையே ஆட்டங்காண வைத்துவிடுகிறது. லஞ்சம் என்பது தற்போது சாதாரண விஷயமாகிவிட்டது. ஓட்டுக்கு பணம் தருவது பரவலாக பொதுமக்களால் பேசப்படும் விஷயமாகிவிட்டது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தனது கவலையை பதிவு செய்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai