Enable Javscript for better performance
காங்கிரஸால் வறுமையை ஒழிக்க முடியாது: ராமதாஸ் பேச்சு- Dinamani

சுடச்சுட

    
    ramados

    காங்கிரஸ் கட்சியால் வறுமையை ஒழிக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
    வந்தவாசி தேரடியில் ஆரணி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் வெ.ஏழுமலையை ஆதரித்து  புதன்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது:
    வறுமையை ஒழிப்போம் என்று ராகுல் காந்தி கூறுகிறார். 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டும் அவர்களால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. காவிரி பிரச்னை, கச்சத்தீவு தாரைவார்ப்பு என பல்வேறு துரோகங்களை தமிழகத்துக்கு  காங்கிரஸ் கட்சி செய்துள்ளது. காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளின் ஆதரவுடன் இலங்கையில் மகிந்த ராஜபட்ச ஈழத்தமிழர்களை கொன்று குவித்தார். ஆனால், அப்போது கருணாநிதியோ தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் என்று வேடிக்கை செய்தார். எனவே, இந்த இரு கட்சிகளையும் தமிழக மக்கள் மன்னிக்கக் கூடாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை 10 அம்சக் கோரிக்கைகளில் ஒன்றாக வைத்துள்ளேன். அதிமுகவும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆளும் அதிமுக மட்டுமே இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியும். இனி எந்தக் காலத்திலும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai