Enable Javscript for better performance
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா? 

    By DIN  |   Published on : 28th March 2019 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    petrol

    சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இரு நாட்களாக மாற்றமின்றி இருந்த வந்த நிலையில், இன்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இடையில் சில தினங்கள் குறையத் தொடங்கியது. சில தினங்காக குறைந்தும், அதிகரித்தும் கடந்த இரு தினங்களாக மாற்றமின்றியும் விற்பனையாகி வந்தது.

    இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.75.62 ஆகவும், டீசல் லிட்டருக்கு 11 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.70.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai