Enable Javscript for better performance
ஜனநாயகத்தையும், தமிழர்களையும் திமுக காப்பாற்றும்: வைகோ- Dinamani

சுடச்சுட

    

    ஜனநாயகத்தையும், தமிழர்களையும் திமுக காப்பாற்றும்: வைகோ

    By DIN  |   Published on : 28th March 2019 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaiko

    பொதுக்கூட்டத்தில் வடசென்னை மக்களவை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியையும், பெரம்பூர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரையும் ஆதரித்து பேசுகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. 


    ஜனநாயகத்தையும், தமிழர்களையும் திமுகவே காப்பாற்றும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
    பெரம்பூரில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியையும், பெரம்பூர் சட்டப் பேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரையும் ஆதரித்து வைகோ பேசியது:
    இந்தியாவில் அடுத்து நிலைக்கப் போவது ஜனநாயகமா, பாசிசமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். 
    அதிமுக ஆட்சியில் எதை எடுத்தாலும் ஊழல். சென்னை மக்களின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போடுவதுபோல 300 சதவீதம் வரை சொத்துவரி அதிமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. 200 சதவீதம் தண்ணீர் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. 
    சரக்கு சேவை வரியால் 50 ஆயிரம் சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்றார்கள். 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது. 
    தமிழகத்துக்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் எல்லாம் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. இந்தியாவிலேயே அதிகமான வேலைவாய்ப்பு இல்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலம் தமிழகம் என்று மத்திய அரசினுடைய புள்ளியியல் துறை தெரிவிக்கிறது. 
    அரசு மருத்துவமனைகளில் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை உள்ளது. கர்ப்பிணிகளுக்கு கெட்ட ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இந்த அரசு தூக்கியெறியப்பட வேண்டிய அரசு. ஜனநாயகத்தையும் தமிழர்களையும் திமுகவே காப்பாற்றும் என்றார்.
    புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து வைகோ பேசினார். 
    இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai