Enable Javscript for better performance
டிஜிபி - வருமான வரி அதிகாரிகளுடன் தேர்தல் சிறப்பு செலவினப் பார்வையாளர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    டிஜிபி - வருமான வரி அதிகாரிகளுடன் தேர்தல் சிறப்பு செலவினப் பார்வையாளர் ஆலோசனை

    By DIN  |   Published on : 28th March 2019 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    meet

    சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன், வருமானவரித் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய மது மகாஜன். 


    தமிழகத்தில் தேர்தல் செலவினப் கண்காணிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு செலவின பார்வையாளர் மது மகாஜன் புதன்கிழமை ஆய்வு செய்தார். காவல் துறை டிஜிபி, வருமான வரித்துறை அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பல்வேறு மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் அவர் காணொலிக் காட்சி வழியாகவும் விவாதித்தார்.
    தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கு விவரங்களை மேற்பார்வையிட முன்னாள் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி மது மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை தமிழகம் வந்த அவர், தேர்தல் துறை அதிகாரிகள், தமிழக அரசுத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    யார், யார் பங்கேற்பு: இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, காவல் துறை இயக்குநர் தே.க. ராஜேந்திரன், ஏடிஜிபி அமலாக்கத் துறை ராஜேஷ் தாஸ், வருமான வரி புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ஜெனரல் முரளி குமார், டாஸ்மாக் ஆணையாளர் கிர்லோஷ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
    எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: தேர்தல் செலவு விவரங்களைக் கண்காணிக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு செலவினப் பார்வையாளரிடம் எடுத்துரைக்கப்பட்டதாகத் தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நிலை கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படைகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம், தங்கம், வெள்ளி பொருள்கள் குறித்த தகவல்களும் செலவினப் பார்வையாளரிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வருமான வரித் துறை அதிகாரிகளை இணைத்து கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai