Enable Javscript for better performance
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறதா?- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறதா? 

    By DIN  |   Published on : 28th March 2019 10:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nhai


    தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 சுங்கச்சாவடிகளில், சுங்கவரிக் கட்டணம் ரூ.5 முதல் 15 வரை உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 43 சுங்கச்சாவடிகளில் 20 சுங்கச்சாவடிகளில் மட்டும் வரும் ஏப்ரல் 1 ஆண் தேதி முதல் சுங்கவரிக்கட்டணம் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. 

    மொத்த விலை குறியீட்டின் அடிப்படையிவேயே இந்த கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 

    சுங்கவரிக்கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ள சுங்கச்சாவடிகள்: செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர், ஸ்ரீபெரும்புதூர், சூரப்பட்டு, ஆத்தூர், பூதக்குடி, சின்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளும், சென்னையில் இருந்து பெங்களூரு, சேலம் மற்றும் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 6 சுங்கச்சாவடிகளுக்கும் சுங்கவரிக்கட்டணம் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் சுங்கச்சாவடிகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் குறைந்திருப்பதாகவும், உயர்த்தப்படும் கட்டணம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த அறிவிப்பு அப்பகுதியில் தினசரி பயணித்து வரும் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ பயணம் செய்யும்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும், இந்தக் கட்டணமும் மக்கள் பயணிக்கும் வாகனத்தை பொருத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai