Enable Javscript for better performance
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு நினைவிடம்: அரசு பரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு நினைவிடம்: அரசு பரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 28th March 2019 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையருக்கு, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே அல்லது சென்னை மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த மனு:
    தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர். அவரது சொந்த ஊரான திருவாரூர் அருகே உத்தமதானபுரத்தில் உள்ள அவரது வீட்டை தமிழக அரசு நினைவிடமாக மாற்றியுள்ளது. அவரது அரும் பணியை மாணவர்களும், இளம் தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. 
    எனவே கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர்  சிலை அருகே அல்லது சென்னை மெரீனா கடற்கரை உள்ளிட்ட இடம் ஒன்றில் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையருக்கு  நினைவிடம் அமைக்க வேண்டும். இதுகுறித்து கடந்த 2019 மார்ச் 11-ஆம் தேதி தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே இதுகுறித்து அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 
    இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து மனுதாரருக்கு 8 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai