Enable Javscript for better performance
நியூட்ரினோ ஆய்வக திட்டம் கைவிடப்படும்: மு.க. ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    
    stalin2


    மத்தியில் நிகழப் போகும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
    தேனி, பங்களாமேடு திடலில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்கள் பெரியகுளம் சரவணக்குமார், ஆண்டிபட்டி  ஏ. மகாராஜன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியது:
    மத்தியில் நிகழப் போகும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டம் தடுக்கப்படும். கல்விக் கடன் மற்றும் பயிர்க் கடன்கள் ரத்து செய்யப்படும். மத்திய அரசுப் பணியில் பிற்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படும்.
    தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்படும். திண்டுக்கல், பெரியகுளம், தேனி வழியாக கம்பம் வரை புதிய ரயில் பாதை திட்டம் கொண்டு வரப்படும். தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனவளத்தை பாதுகாக்க புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai