Enable Javscript for better performance
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு  முதல்வர் இரங்கல்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு  முதல்வர் இரங்கல்

    By DIN  |   Published on : 28th March 2019 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    விஷவாயு தாக்கியது உள்பட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின்  குடும்பத்தினருக்கு  முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
    காஞ்சிபுரம் மாவட்டம்ல நெமிலி பிரதான சாலை விநாயாக நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தனது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய போது விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
    அவரை காப்பாற்றச் சென்ற கார்த்தி, கண்ணன், பரமசிவம், சுரதாபிசி, லட்சுமிகாந்தன் ஆகியோரும் உயிரிழந்தனர். இதேபோல, திருவாரூர் மாவட்டம்ல மன்னார்குடியைச் சேர்ந்த சிங்காரவேல், வீரையன், மோகன், பாபு, சுரேஷ், அறிவுநிதி ஆகியோர் எதிர்பாராத வகையில் நேரிட்ட  வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இரு வேறு சம்பவங்களில் 
    உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai