Enable Javscript for better performance
பள்ளி மாணவனுடன் தனி அறையில் பாலியல் தொந்தரவு: ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மாணவனுடன் தனி அறையில் பாலியல் தொந்தரவு: ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது

    By DIN  |   Published on : 28th March 2019 12:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ARREST_(sattamani)

    மதுரையில் 16 வயது பள்ளி மாணவனை கடத்தில் 4 நாட்களாக தனி அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
     
    மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியை நிர்மலா. இவர் அருகில் வசிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் டியூசன் எடுத்து வந்துள்ளார். 

    இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது மாணவன் மீது ஆசிரியை நிர்மலாவுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக அந்த மாணவனை அணுகிய நிர்மலா கடந்த சில நாட்களுக்கு முன் விருப்பத்திற்கு மாறாக அழைத்துச் சென்ற நிர்மலா, ஒத்தக்கடையில் உள்ள தனி அறையில் வைத்து 4 நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

    பின்னர் வீடு திரும்பிய அந்த மாணவன் ஆசிரியை நிர்மலாவின் பாலியல் தொந்தரவு குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

    பெற்றோரின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட  காவல்துறையினர் ஆசிரியை நிர்மலாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் ஆரணியை சேர்ந்த ஆசிரியை நித்யா ஐ.டி.ஐ. படிக்கும் 17 வயது மாணவன் மற்றும் பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு ஆங்கில பாடம் டியூசன் எடுத்து வந்த நித்யா பள்ளி மாணவன் ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார்.

    மாணவர்களுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார். 2 மாணவர்களையும் வெளியூர் அழைத்து சென்று ஓட்டலில் அறை எடுத்தும் தங்கி உள்ளார். மாணவர்களுக்கு ஆசிரியைகள் பாலியல் தொல்லை கொடுத்து வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai