Enable Javscript for better performance
பாஜகவுக்கு  தனிப் பெரும்பான்மை: சுப்பிரமணியன்சுவாமி- Dinamani

சுடச்சுட

    
    samy


    மக்களவைத் தேர்தலில் பாஜக-வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்றார் அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.  
    சென்னையிலிருந்து புதன்கிழமை மதுரை வந்த அவர் அளித்த பேட்டி:  அமமுக-வுக்கு பொதுச் சின்னம் வழங்குவது குறித்து  தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் பாஜக வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும். 
     காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தல் வாக்குறுதியாக குறைந்தபட்ச வருவாய் திட்டத்தின் மூலம் ரூ. 72 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், அதை  எப்படித் தரப்போகிறார் என்ற திட்ட அறிக்கை இல்லை.  மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவது தொடர்பாக  மத்திய அரசிடம் 2 முறை வலியுறுத்தினேன். 
    கடந்த 2001-இல் மத்திய அமைச்சராக சரத் யாதவ் இருந்த போது மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட, மத்திய அமைச்சரவை முடிவு எடுத்தது. ஆனால், அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. பின்னர், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுஃல் பட்டேல் விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றபோது, அப்போதைய மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவதைத்  தடுத்தார் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai