Enable Javscript for better performance
மன்னார்குடியில் நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் சாவு

    By DIN  |   Published on : 28th March 2019 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manaugudi

    மன்னார்குடியில் புதன்கிழமை  நேரிட்ட  வெடி விபத்தில் சேதமடைந்த நாட்டு வெடி தயாரிப்பு ஆலை. 


    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் புதன்கிழமை அதிகாலையில் நேரிட்ட  வெடி விபத்தில் 6 பேர்  உயிரிழந்தனர். 
    மன்னார்குடி மன்னை ப. நாராயணசாமி நகர், பாமணி ஆற்றங்கரை ஓரத்தில் 200 சதுர அடி கான்கிரீட் கட்டடத்தில்,  ஆசாத் தெருவைச் சேர்ந்த சிங்காரவேலுவுக்கு (60) சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் ஆலை கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில், 20-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர்.  
        இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 10 பேர் நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். புதன்கிழமை அதிகாலையில் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிப்பதற்காக சிங்காரவேல்  அங்கு சென்றார். இதைத் தொடர்ந்து  சிறிது நேரத்தில் ஆலையினுள் பயங்கர வெடி சப்தம் கேட்டது. தொடர்ந்து 10- முறைக்கு மேலாக  வெடி சப்தம் கேட்டுள்ளது. ஆலைக்கு அருகில் பொருள்கள் வைப்பறையில் இருந்த தொழிலாளர் அபாஷ் வெளியே ஓடி வந்தபோது, அக் கட்டடம் இடிந்து விழுந்தது. 
    இதனிடையே, வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் உடல் தூக்கி வீசப்பட்டு, அருகில் இருந்த மரத்தின் அருகே விழுந்தது. ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றியபோது, மேலும் 5 பேரின் சடலங்கள்  கருகிய நிலையில் மீட்கப்பட்டன. இதில், ஆலை உரிமையாளர் த. சிங்காரவேல் (60), அவரது மாமனார் எம். வீரையன் (85),  எஸ். மோகன் (55), ப. பாபு (40), க. அறிவுநிதி (28), சுரேஷ் (40) ஆகிய 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
    இந்த விபத்தில் பலத்த 3பேர்  மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai