
ராமேசுவரம்: மக்களவைத் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட தொகுதியில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மோடி தலைமையில் ஆட்சி அமையும் என்றும் தமிழகத்தில் 40 தொகுதியிலும் வெற்றி பெருவது உறுதி என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக தனி ஹெலிகப்டர் மூலம் மண்டபம் கேம்ப் விமான தளத்திற்கு இன்று வியாழக்கிழமை காலை வருகை தந்தார்.
பின்னர் அங்கிருந்து காரில் ராமேசுவரம் கோயிலுக்கு வருதை தந்த கோயல், பாஜக மிகப்பெரிய அளிவில் வெற்றியடைய வேண்டி நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சுவாமி தரிசனம் செய்தது மன மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டில் பாதுகாப்பு, மற்றும் வளா்ச்சிக்காக பாஜக பாடுபட்டு கொண்டு இருக்கின்றது.
17-வது மக்களவைத் தோ்தலில் பாஜக தேசிய அளவில் 300-க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
தமிழகத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினார்நாகேந்திரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இதே போன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதியில் இந்த கூட்டணி வெற்றி பெரும் என நம்பிக்கை தெரிவித்தார்.