Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் கரை ஒதுங்கிய பிரம்மோஸ் ஏவுகணை உதிரி பாகம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் கரை ஒதுங்கிய பிரம்மோஸ் ஏவுகணை உதிரி பாகம்

    By DIN  |   Published on : 28th March 2019 12:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    BrahMos_missile_that_washed_ashore_2

     

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கடல்பகுதியில் பிரம்மோஸ் ஏவுகணை உதிரி பாகம் புதன்கிழமை கரை ஒதுங்கியது. மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த கடலோர காவல்படை அந்த உதிரி பாகத்தை மீட்டது.

    ஒடிஸாவில் நடைபெறும் ஏவுகணை சோதனயின்போது அதன் உதிரி பாகங்கள் வங்காள விரிகுடா கடல்பகுதியில் விழ அதிக வாய்ப்புள்ளது. அவ்வகையில், 15 அடி நீளமுள்ள பிரம்மோஸ் ஏவுகணை உதிரிபாகம் தற்போது கரை ஒதுங்கியுள்ளது.

    அதில், அக்டோபர் 24, 2016 என்ற தேதி இடம்பெற்றிருந்தது. எனவே இந்த ஏவுகணை 2017-ஆம் ஆண்டில் பரிசோதிக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் இது பிரம்மோஸ் ஏவுகணையின் எரிசக்தி பகுதி எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கடலோர காவல்படை இஸ்ரோவுக்கு தகவலளித்துள்ளது. எனவே இஸ்ரோ குழுவினர் அதனை மறு ஆய்வு செய்ய குழு அனுப்பிவைக்க உள்ளது. அதுவரை அப்பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் அந்த உதிரி பாகம் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அந்த பாகத்தை தேவனாம்பட்டினம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு அது கைதுவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai