தமிழிசை கற்றப்பரம்பரை அல்ல: தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை: கருணாஸ்

தமிழிசை கற்றப்பரம்பரை அல்ல: தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை என்று திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழிசை கற்றப்பரம்பரை அல்ல: தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை: கருணாஸ்

சென்னை: தமிழிசை கற்றப்பரம்பரை அல்ல: தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை என்று திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு தாக்கல்செய்துள்ளார். ஆனால் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அவர் கவுரவ இயக்குனராக இருப்பதை வேட்பு மனுவில் குறிப்பிடாத காரணத்தால், அவரது வேட்பு மனுவினை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு பரிசீலனை சிறுது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் கனிமொழியின் வேட்பு மனுவில் படிவம்-2 சரியாக நிரப்பப்படாததால் அதுவும் சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

இதன்காரணமாக வேட்பு மனுவினை கூட ஒழுங்காக நிரப்பத் தெரியவில்லை  என்று அவர் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதனால் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் ” நாங்கள் கற்றப்பரம்பரை; குற்றப்பரம்பரை அல்ல” என்று பதிவிட்டிருந்தார். பின்னர் அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக அவர் அந்தப்பதிவினை உடனடியாக நீக்கி விட்டார்.  

இந்நிலையில் தமிழிசை கற்றப்பரம்பரை அல்ல: தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை என்று திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

குற்றம்பரம்பரை என்ற சொற்றொடரின் வரலாறு தெரியுமா தமிழிசைக்கு? கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வட மேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங் களிலும் நாடோடிக் கூட்டமாக இடம் விட்டு மாறி மாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாக செய்து கொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளை குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத்திருந்தது. சில மாகாணங்களில் மட்டும் இருந்த இந்த சட்டம் 1911 இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெரு போராட்டத்திற்கு பின்னர் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தானாகவே  இச்சட்டம் காலாவதியானது.

இந்த வரலாற்றை தமிழிசை மறந்தது ஏன்? குற்றம்பரை சட்டத்தை எதிர்த்து அதற்காகவே போராடி உயிர் நீத்தவர்களின் மண்ணில் நின்று ஓட்டுக் கேட்கும் தமிழிசை, அவர்களின்  வரலாற்றை கொச்சைப்படுத்துவதின் நோக்கம் என்ன?

குற்றப்பரம்பரை என்பது அன்றைய ஆங்கிலேயே அரசு குறிப்பிட்ட மக்களை முடக்குவதற்காக பயன்படுத்திய ஒடுக்குமுறை சொல்லாடலே. அதை தன்னுடைய தொகுதியில் தேர்தலுக்காக, குறிப்பிட்ட சாதியினரை அவமானப்படுத்தும் விதமாக அச் சொல்லாடலை பயன்படுத்தியது ஏன்?

வேட்பு மனுவையே சரிவர நிரப்ப தெரியாத நீங்கள் கற்றப்பரம்பரையா? ஓட்டு வாங்குவ தற்காகவே இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஊரெல்லாம் சுவரொட்டி வழியாக நான் நாடார் நாடார் என்று அறிவிப்பு செய்வது ஏன்? தேர்தல் தோல்வி பயத்தில் குற்ற பரம்பரை என தேவர் சமூகத்தை சீண்டி நாடார் தேவர்  சமூகத்திற்குள்  கலவரம் தூண்ட முயற்சி செய்கிறீர்களா?

தமிழிசை அவர்களே! நாங்கள் குற்றப்பரம்பரை என்று சொற்றொடரை சுமந்து சமூகநீதி விடியலை திறக்கப் போடுகிறார்கள்! ஆனால் நீங்கள் சார்ந்துள்ள பா.ச.க. ஒட்டுமொத்த சமூகத்தையே விழுங்குகிற எதேச்சதிகார ஆரிய முதலை என்பதை  நீங்கள் அறிந்தீர்களோ என்னவோ நாட்டு மக்கள் அறிவார்கள்!

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com