அந்தமான் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை திமுக ஆதரிக்கும் என்று அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
அந்தமான் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் குல்தீப் ராய் சர்மாவை ஆதரிப்பது என திமுக முடிவெடுத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.