
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றக்கோரி கிறிஸ்துவ அமைப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தின் 18 தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 18ஆம் தேதி புனித வியாழன் கடைப்பிடிக்கப்படுவதால் தேர்தல் தேதியை மாற்ற கோரி கிறிஸ்துவ மக்கள் காலம் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...