
பணப்பரிமாற்ற செயல்பாடுகளை தீவிரமாக கவனித்து வருவதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தின் 18 தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடத்தப்படவுள்ளது. மக்களவை, இடைத்தேர்தலுக்காக வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனு மீதான பரிசீலனை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
அரசியல் கட்சிகள், தேர்தல் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், தேர்தலை நடத்தும் மிகப்பெரும் பணியை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 1950 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பது உட்பட பல தகவல்களை பெறலாம்.
பணப்பரிமாற்ற செயல்பாடுகளை தீவிரமாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...