
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியில்,
மக்களவைத் தேர்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து வெற்றி பெறும். திமுக - காங்கிரஸ் கூட்டணி எந்தவொரு கொள்கையும் தலைமையும் இல்லாமல் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...